அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

0
167

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி ,அமெரிக்க டொலரின் கொள்விலை 298.89 ஆகவும் விற்பனை விலை 313.66 ஆகவும் குறைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கொழும்பு பங்குச் சந்தை  நிலவரம்

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு! | An Increase In The Value Of The Rupee

இதேவேளை, முன்னதாக, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று காலை வர்த்தகத்தின் போது சுமார் 100 புள்ளிகளால் அதிகரித்தது.

சமீபத்திய CSE புதுப்பிப்பின் படி, ASPI 10,171.62 புள்ளிகளாக அதிகரித்த அதே நேரத்தில் S&P SL20 41.88 புள்ளிகள் அல்லது 1.41% அதிகரித்து 3,015 புள்ளிகளாக உள்ளது.