24 ஆண்டுகள் பணிக்காலத்தில் 20 ஆண்டுகள் லீவ்; ஆசிரியரின் செயல் !

0
180

இத்தாலியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 24 ஆண்டுகளில் மொத்தமாக 4 ஆண்டுகள் மட்டும்தான் பாடசாலைக்கு வந்ததாகவும் எஞ்சியுள்ள 20 ஆண்டுகளை விடுப்பிலேயே கழித்திருக்கிற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது 56 வயதாகும் சின்சோ பூலியானா தி லியோ எனும் அந்த ஆசிரியர் , 24 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், 20 ஆண்டுகள் விடுப்பிலேயே கழிந்திருக்கின்றார்.

வெனீஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.

உடல்நிலை சரியில்லை , கருத்தரங்கு, மாநாட்டில் கலந்து கொள்ள என புதுப்புது காரணங்களில் கணக்கு, வழக்கு இல்லாமல் லீவு எடுத்துள்ளதுடன், மகளிருக்கான சிறப்பு உரிமைகளையும் பயன்படுத்தியிருக்கிறார்.

24 ஆண்டுகள் பணிக்காலத்தில் 20 ஆண்டுகள் லீவ் எடுத்த ஆசிரியர்! எந்த நாட்டில் தெரியுமா? | A Teacher 20 Yearsleave In 24 Years Of Service

கொதித்தெழுந்த மாணவர்கள்

எப்போதுமே மிக நீண்ட காலத்துக்கு சின்சோ பூலியானா விடுப்பு எடுப்பதால் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இவர் மீது எரிச்சலில் இருந்திருக்கின்றனர். சமீபத்தில் ஒருமுறை பள்ளிக்கு வந்த இந்த ஆசிரியர் வாய்மொழியாக தேர்வு நடத்தியிருக்கிறார்.

அப்போதும் கூட ஃபோனில் மெசேஜ் செய்தபடியே இருந்துள்ளார். இத்தனைக்கும், தற்போதைய பாடத்திட்டம் என்னவென்றே தெரியாமல், சரியான புத்தகம் கூட இல்லாமல் இருந்திருக்கிறார்.

24 ஆண்டுகள் பணிக்காலத்தில் 20 ஆண்டுகள் லீவ் எடுத்த ஆசிரியர்! எந்த நாட்டில் தெரியுமா? | A Teacher 20 Yearsleave In 24 Years Of Service

இதனால் கொதித்தெழுந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதோடு நாட்டின் மிக மோசமான ஊழியர் என்ற முத்திரையும் இவர் மீது விழுந்தது. சின்சோ பூலியானா நடத்திய பாடங்கள் அனைத்தும் மிகுந்த குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன என்று பள்ளியின் ஆய்வுக் குழு அறிக்கை சமர்ப்பித்தது.

இதனால் கடந்த ஜூன் 22ஆம்திகதி பணிநீக்கம் செய்யப்பட்டார். முன்னதாக, தனக்கு எதிரான பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆசிரியர் முறையிட்டார். அவர் பணியில் தொடருவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் , 24 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் பணிக்கு வரவே இல்லை என்பது தெரிய வந்ததும், இந்த மோசமான ஆசிரியரை பணிநீக்கம் செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.