திடீரென குள்ளமான பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்! வைரலாகும் புகைப்படம்

0
207

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே மிக உயரமானவரான டேனியல் காவ்சின்ஸ்கி, பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

6 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவரான டேனியல் காவ்சின்ஸ்கி பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே மிக உயரமானவராவார்.

இவர் ரிஷி சுனக்கை நேற்று சந்தித்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

5 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட ரிஷி சுனக், டேனியல் அருகில் நிற்கும் போது மிகவும் சிறிய தோற்றத்தில் காணப்படுகிறார்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போல இருக்கிறது என கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.