கொழும்பில் இருந்து வெளியேற வேண்டாம்! அமைச்சர்களுக்கு ரணில் உத்தரவு

0
208

அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களையும் இந்த வாரம் கொழும்பில் இருந்து வெளியேற வேண்டாம் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அனைத்து அமைச்சர்களினுடைய தனிப்பட்ட வட்ஸ்அப் இலக்கம் ஊடாக அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதியின் அறிவிப்பின் பேரில் இவ்வாறு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு செல்லும் அமைச்சர்கள் தமது பயணங்களை இரத்து செய்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

கடன் மறுசீரமைப்பு பிரேரணை 

கொழும்பிலிருந்து வெளியேற வேண்டாம்! அமைச்சர்களுக்கு ரணில் பிறப்பித்த உத்தரவு | Special Protection For Ministers

லண்டன் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26.06.2023) நாட்டிற்கு வருகைதந்தவுடன் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள ஆளும் கட்சியின் விசேட கூட்டத்தில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு அவசர தேவை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணை எதிர்வரும் சனிக்கிழமை (01.06.2023) நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியினால் சமர்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதுடன் அதனைக் கடைப்பிடிக்கும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் 05 நாட்களுக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.