இனப்படுகொலை பற்றிய கனடாவின் புதிய தகவல்!

0
163

இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனடா எந்தக் கண்டுபிடிப்பும் செய்யவில்லை என்று கனேடியத் தலைவர்களுக்கிடையிலான மோதலில் கனடாவின் வெளிவிவகார அமைச்சு இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட அதன் தலைவர்கள் சிலரின் குற்றச்சாட்டுகளுக்கு முரணானது.

மார்ச் 21, 2021 அன்று பிரம்டனின் நகர சபையின் இனப்படுகொலை பற்றிய நிறைவேற்றப்பட்ட அறிக்கை குறித்து கனேடிய வெளியுறவு அமைச்சகம் இலங்கை அதிகாரிகளுக்கு பதிலளித்ததாக அறிய முடிகின்றது.

மாநகரசபைகள், மாகாண அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்திலிருந்து சுயாதீனமானவை எனவும் இலங்கை இனவழிப்பு குறித்த அவற்றின் நிலைப்பாடு மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாகாது எனவும்  கனடா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையின் போர் வெற்றியின் நினைவு தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, 2023 மே 18 அன்று இனப்படுகொலை இடம்பெற்றதாக கனேடியப் பிரதமர் கூறியிருந்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் – கனடியர்களின் கதைகள் “மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவை தொடர்பிலும் கனேடிய பிரதமர் கூறியிருந்தார். 

அதனால்தான் கடந்த ஆண்டு கனேடிய நாடாளுமன்றம் மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக பிரேரணையை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

இந்த குற்றச்சாட்டை நிராகரித்த இலங்கை கனேடிய தூதுவர் எரிக் வால்ஷை அழைத்து முறைப்படி தனது எதிர்ப்பை பதிவு செய்தது.

கனடாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு வேறுவிதமாக இருந்தபோதிலும் கனேடிய அரசியல்வாதிகள் கனடாவில் உள்ள தமிழர்களின் வாக்குத் தளத்தை ஈர்க்கும் வகையில் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர்.

கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றம் ஏற்கனவே தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. 

இது தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கன்சர்வேட்டிவ் எம்.பி விஜய் தணிகாசலம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர் மசோதா. 

இது வேறு சில இலங்கை கனேடியர்கள் சட்டத்தின் அரசியலமைப்பிற்கு சவால் விடுத்துள்ளனர்.