இலங்கையர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய திராட்சை விலை! வாழைப்பழம் தங்கத்தை விட விலை அதிகம்

0
187

300 ரூபா வரையில்  அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளது. எனினும் இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். 

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 

இன்று சந்தையில் மூன்று திராட்சைப் பழங்களின் விலை 90 ரூபாவாகும். ஒரு திராட்சைப் பழத்தின் விலை 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

குறைந்த விலையும் குறையாத விலையும்  

அப்படியென்றால் டொலரை நசுக்கியா இந்த திராட்சைப் பழத்திற்கு ஊற்றுகின்றீர்கள் என கேட்க  விரும்புகின்றேன். 2,690 ரூபாவுக்கு ஒரு கிலோ கிராம் திராட்சை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  

இலங்கையர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் திராட்சையின் விலை! தங்கத்தை விட அதிக விலையில் வாழைப்பழம் | Sri Lanka Food Crisis Sri Lankan Rupee Value

ஒரு கிலோ அப்பிள் பழம் 2,500 ரூபாவாகும். உரத்திற்கு பதிலாக டொலரா இதற்கு இடப்படுகின்றது. எவ்வாறு இவற்றிற்கு விலை அதிகரிக்கப்படுகின்றது. 

இலங்கையில் பழங்கள், குறிப்பாக வாழைப்பழங்கள் தங்கத்தை விடவும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கோலிக்கூடு வாழைப்பழம் 450 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. என்ன செய்து கொண்டிருக்கின்றனர். ஏனைய பழங்களது விலைகளும் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

மரக்கறிகளின் விலைகள் மற்றும் மீனின் விலைகளும் பாரிய அளவில் அதிகரித்துள்ளன. மீனுக்கு உணவு இட்டு மீன் பிடிப்பது போல விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அப்படியெனின் எவ்வாறு மீனின் விலை அதிகரிக்கப்படும். மற்றைய பக்கத்தில் கோழி இறைச்சியின் விலையும் அதிகரித்துள்ளது.  

டொலரின் விலை குறைந்துள்ளது என கூறாமல் மூன்று வேளை உணவருந்தி வாழ்வதற்கான வழியை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுங்கள் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.