ஆபத்தான பகுதிக்குள் நுழைந்த இளவரசர் ஹாரி; நிபுணர் எச்சரிக்கை!

0
270

ஊடகங்களின் கவனம் மீண்டும் ஹாரி மற்றும் மேகன் மீது குவிந்துள்ள நேரத்தில் ஜூன் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கும் 3ம் சார்லஸ் மன்னரின் அரச குடும்பத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இந்த ஜோடி அழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் ஹரியின் தற்போதைய செயற்பாடுகளே இதற்கு நெருக்கமான காரணம் என ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு இளவரசர் ஹாரி ஒரு ‘ராயல்’ என்ற முறையில் ஒரு செய்தித்தாள் நிறுவனத்திற்கு எதிராக அவர் கொண்டு வந்த வழக்கில் பங்கேற்றார்.

மேலும், ஹாரியின் ‘ஸ்பேர்’ புத்தகமும் அரச குடும்பத்தை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அதில் அதிக தனிப்பட்ட விஷயங்கள் இடம் பெற்றுள்ளதே இந்த கோபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இளவரசர் ஹாரி மீண்டும் அரச மாளிகைக்கு வர தடை விதிக்கப்படும் என்ற அறிகுறிகள் தென்படுகின்றன. ஒரு அநாமதேய ஆதாரம் ‘டெய்லி மெயிலிடம் ‘அவர்கள் வரவில்லை என்றால் ஆச்சரியமில்லை.

அதிகாரப்பூர்வமாக அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. இளவரசர் ஹாரி அழைக்கப்படாவிட்டால் அரச நிகழ்வில் இருந்து விலகுவது இதுவே முதல் முறை.

இதற்கிடையில் இளவரசர் ஹாரி ஆபத்தான மண்டலத்திற்குள் நுழைகிறார் என்று அரச வர்ணனையாளரும் நிபுணருமான டான் வூட்டன் எச்சரித்துள்ளார்.

ஹாரிக்கு சம்பந்தமே இல்லாத சண்டையில் பலியாகிவிட்டார். சந்தோஷமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது. இது கண்டிப்பாக அவனது திருமணத்தையும் பாதிக்கும் என்று நினைக்கிறேன். மன்னன் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் ஹாரியின் அதிகாரப்பூர்வ பட்டங்கள் அனைத்தையும் நீக்க முயற்சித்தால் இது ஆபத்தான சூழ்நிலையாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.