யாழில் அர்ச்சகர்கள் அடிதடியால் நின்று போன மகோற்சப விழா; கொடியேற்றம் காணவந்த பக்தர்கள் காத்திருப்பு!

0
174

யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள  அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக ஆலயத்தின் மகோற்சவம் இன்று இடம்பெறவிருந்த நிலையில் மகோற்சப பெருவிழா தடைப்படுள்ளமை பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் மகோற்சப பெருவிழா நாளில் அம்மனை வழிபடுவதற்காக ஆவலோடு வந்த பக்தர்கள் ஆலயம் பூட்டப்பட்டுள்ளதால் ஆலய வாசலில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

யாழில் அர்ச்சகர்கள் அடிதடியால் நின்று போன மகோற்சப பெருவிழா; கொடியேற்றம் காணவந்த பக்தர்கள் காத்திருப்பு! | Stop Makotsabha Festival Veera Kaaliamman Jaffna

பூசகர்களிடையே நீண்டகாலமாக முரண்பாடு

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களிடையே நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்டு வந்துள்ளது.

இந் நிலையில் இவ்வருடத்திற்கான மகோற்சவத்தினை யார் நடாத்துவது என இரு பூசர்களிடையே முரண்பாடு அடிதடியில் முடிந்துள்ளது.

ஆலயத் திறப்பினை உரிய பூசகரிடம் வழங்க மற்றுமொரு பூசகர் மறுத்ததால் வாய்த்தர்கம் அதிகரித்த நிலையில் வியாழக்கிழமை பொலிஸார் ஆலயத்தினை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

 காத்திருக்கும் பக்தர்கள்

யாழில் அர்ச்சகர்கள் அடிதடியால் நின்று போன மகோற்சப பெருவிழா; கொடியேற்றம் காணவந்த பக்தர்கள் காத்திருப்பு! | Stop Makotsabha Festival Veera Kaaliamman Jaffna

அதோடு இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் திறப்பை ஒப்படைப்பதாகவும் அங்கு உரிய ஆதாரங்களை காட்டி பெற்றுக் கொள்ளுமாறும் ஆலயத் திறப்பினை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்றையதினம் காலை 10 மணியளவில் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் பூசகர்களினுடைய முரண்பாடால் மகோற்சவம் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்றில் இன்று வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அர்ச்சகர்கள் அடிபாட்டால் ஆலய மகோற்சபம் தடைப்பட்டுள்ளமை அம்மன் பக்கதர்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.  

யாழில் அர்ச்சகர்கள் அடிதடியால் நின்று போன மகோற்சப பெருவிழா; கொடியேற்றம் காணவந்த பக்தர்கள் காத்திருப்பு! | Stop Makotsabha Festival Veera Kaaliamman Jaffna