துர்நாற்றம் வீசிய நிலையில் கண்டறியப்பட்ட 1,400 கிலோகிராம் அரிசி!

0
256

நுவரெலியா – நானுஓயாவில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை அரிசி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்ட சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் அரிசி விலை அதிகரித்து இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக நானுஓயா கிளாசோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாக 3,000 கிலோ கிராம் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளது.

இதில், 1,600 கிலோகிராம் அரிசி விற்பனைச் செய்யப்பட்டது. அதற்கிடையில் அரிசியின் விலை ஓரளவுக்கு குறைந்துள்ளது.

ஆகையால், மீதமிருந்த 1,400 கிலோகிராம் அரிசி விற்பனைச் செய்யாமல் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் துர்நாற்றம் வீசிய நிலையில் கண்டறியப்பட்ட மர்மபொருள்! | Rice Found Smelly In Nuwara Eliya Sri Lanka

அரிசி காலவதியானதால், ​அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளது. ​அதனை அறிந்துகொண்ட தோட்ட நிர்வாகம் அவற்றை கடந்த நாட்களில் குழிதோண்டி புதைத்துள்ளது.

இது தொடர்பில், நானுஓயா பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பிரகாரம், இன்று செவ்வாய்க்கிழமை (02-05-2023) அவை தோண்டி எடுக்கப்பட்டன.

அரிசி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆனதால் கெட்டுப் போய் அதிக துர்நாற்றம் வீசுவதாகவும், பரிசோனைக்காக அரிசியின் மாதிரிகளையும் எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.