நிதி மோசடியில் ஈடுபட்ட யாழ். பிரபல பாடசாலை அதிபர்கள்! அதிரடி நடவடிக்கை

0
247

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிதி மற்றும் நிர்வாக முறைகேடு தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக வடமாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்தது.

அதனடிப்படையில் நலமாக கல்வி அமைச்சு கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற நிதி நிர்வாக முறைகள் விசாரிப்பதற்காக விசாரணை குழு ஒன்றை நியமித்துள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

நிதி மோசடியில் ஈடுபட்ட யாழில் உள்ள இரண்டு பாடசாலை அதிபர்கள்! அதிரடி நடவடிக்கை | Principals Of 2 Schools In Jaffna Financial Fraud

இதேவேளை ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், பாடசாலையின் மலர் வெளியீடு ஒன்றுக்காக தனது தனிப்பட்ட வங்கிக்கணக்கு ஊடாக வெளிநாட்டவர்களிடமிருந்து பணத்தினை பெற்று மோசடி செய்ததாக வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பிலும் விசாரணை நடாத்துவதற்கு விசாரணைக்குழு ஒன்றினை அமைத்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.