ஏலத்தில் விடப்பட்ட இலங்கைப் பெண்கள்; விசாரணைகளை ஆரம்பித்த ஐ.நா

0
189

ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் நோக்கங்களிற்காக ஏலத்தில் விடப்பட்ட விவகாரம் குறித்து ஐ.நா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஏலத்தில் விடப்பட்ட இலங்கை பெண்கள்; விசாரணைகளை ஆரம்பித்த ஐ.நா | Sri Lankan Women Put Up For Auction

பதிலளிக்காத அரசாங்கம்

இது தொடர்பில் பெப்ரவரி ஏழாம் திகதி அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்ததுடன் இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசாங்கம் 60 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும் எனவும் அறிவித்திருந்தது.

இருப்பினும் இலங்கை அரசாங்கம் இது குறித்து பதிலளிக்கவில்லை.இந்நிலையிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொழில் நிமித்தம் சுற்றுலா விசாவில் ஓமனுக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்கள் அங்கு பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்டமை அண்மையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.