உக்ரைனில் அகழிகளை தோண்டும் ரஷ்யா! 1வது உலகப் போரை நினைவுபடுத்துகிறதா!

0
204

ரஷ்யா ஜனாதிபதி புடின் கூலிக்கு அமர்த்தியுள்ள பணியாளர்கள் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளைச் சுற்றி முதல் உலகப்போரில் நடந்தது போல பாரிய அகழிகளை தோண்டி வருகிறமை தொடர்பான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்யா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜாபோரிஜியா (Zaporizhzhia) பகுதியில் ஜனாதிபதி புடினால் பணிக்கமர்த்தபட்டுள்ள கிர்கிஸ்தான் (Kyrgyzstan) நாட்டவர்களான பணியாளர்கள் முதல் உலகப் போர்க்காலத்தில் செய்யப்பட்டது போல பாரிய அகழிகள் தோண்டிவருவதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல, சேட்டிலைட் புகைப்படங்கள், ஜாபோரிஜியா பகுதியில், சுமார் 45 மைல் தொலைவுக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளதை காட்டுகின்றன. இந்நிலையில் ரஷ்யா ஆக்கிரமித்துக்கொண்ட உக்ரைன் பகுதிகளை மீண்டும் உக்ரைன் வீரர்கள் கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சம் புடினுக்கு உருவாகியுள்ளது.

உக்ரைனில் அகழிகளை தோண்டும் ரஷ்யா! முதலாவது உலகப்போரை நினைவு படுத்துகிறதா! | Russia Digging Trenches In Ukraine First World War

ஆக்கிரமித்த பகுதிகளை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் புடின் இவ்வாறு அகழிகள் தோண்டி வருகிறார். உக்ரைன் தரப்பு புடினுடைய செயலை கேலி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் அகழி தோண்டுவதற்காக புடினால் பணிக்கமர்த்தபட்டுள்ள கிர்கிஸ்தான் நாட்டவர்களான பணியாளர்கள் சிலர் தங்கள் வேலைக்கு சரியான ஊதியம் வழங்கப்படவில்லை என முறைப்பாடு கூறியுள்ளார்கள்.