யாழ்பாண இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

0
228

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோத சிறுவர் இல்லம் ஒன்று சோதனையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இல்லத்தில் இருந்த சிறுமிகள் துன்புறுத்தப்பட்டமை அம்பலமாகியுள்ளது.

அதோடு மீட்கப்பட்ட சிறுமிகள் பல திடுக்கிடும் தகவல்களியும் வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாய மதமாற்றம்

இருபாலை பகுதியில் உள்ள கானான் ஐக்கிய சபை என்ற கிருஸ்தவ சபையினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலகர்கள் நேற்றையதினம் முற்பகல் அங்கு சென்றனர்.

இல்லத்தில் இருந்த 14 சிறுமிகள் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் உரியவகையில் உணவு வழங்கப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் இல்லத்தில் மீட்கப்பட்ட சிறுவர்கள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்! | Children Rescued From The Jaffa Home

“பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் சேர்க்கப்பட்ட 14 சிறுமிகளும் கட்டாய மதமாற்றத்துக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாய்களுடன் விளையாட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு உள்படுத்தப்பட்டதாகவும் தேவையின்றி விற்றமின் சி மற்றும் டி மாத்திரைகள் சிறுமிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமிகள் விடுத்த கோரிக்கை

அதோடு இல்லத்தில் சிறுமிகள் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் தம்மை வேறு சிறுவர் இல்லங்களில் சேர்க்குமாறு பாதிக்கப்பட்ட சிறுமிகள் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் இல்லத்தில் மீட்கப்பட்ட சிறுவர்கள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்! | Children Rescued From The Jaffa Home

இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமிகள் 14 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த சிறுவர் இல்லமானது வடக்கு மாகாண கல்வி அமைச்சில் மாணவர் விடுதி என பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.