இந்து கோயில்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்பில் இன்று கலந்துரையாடல்!

0
252

வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் அண்மைய நாட்களாக இடம்பெறும் இந்துக் கோவில்கள் மீதான அத்துமீறல்கள் குறித்து இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலுக்காக வடக்கு கிழக்கிலுள்ள சைவ சமயம் சார்ந்த அமைப்புக்கள் கோவில் தர்மகர்த்தா சபையினர் ஆதீன கர்த்தாக்கள் கோவில் நிர்வாகத்தினைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி இன்று பிற்பகல் 4 மணிக்கு நல்லை ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள இந்துக் கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் சைவ மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.