நடிகர் அஜித் தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த சிம்பு மற்றும் விஜய்!

0
125

தமிழில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தான் அஜித். இவரின் தந்தை இன்றையதினம் உடல்நலக்குறைவால் காலமானார். நடிகர் அஜித்தின் தந்தை கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் அஜித் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் சிம்புவும் தனது கவலையையும் இரங்கலையும் அஜித் குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் “தந்தையை இழந்து வாடும் அஜித் சாருக்கு ஆழ்ந்த இரங்கல், இந்தக் கடினமான நேரத்தை எதிர்கொள்வதற்கான மன வலிமையை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் கடவுள் கொடுக்கப் பிரார்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்கள்.

இதனையடுத்து, காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பி இருக்கும் விஜய்யும் சற்றுமுன் அஜித் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி இருக்கிறார்.