கள்ளத்தொடர்பால் பறிபோன பெண்ணின் கூந்தல்!

0
71

 இரண்டு பிள்ளைகளின் தாயை தாக்கி அவரது கூந்தலை அறுத்த சம்பவம் தொடர்பாக பெண்ணொருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது கணவருடன் குறித்த தகாத தொடர்பில் இருந்ததாக எழுந்த சந்தேகம் காரணமாக பெண் தாக்கப்பட்டு, கூந்தல் அறுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சிலாபம், அம்பகந்தவில பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணே இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளதுடன் அவரது கணவர், ஆழ்கடல் மீன்பிடி படகொன்றில் தொழில் செய்து வருகிறார்.

வெட்டப்பட்ட கூந்தலை எடுத்துச் சென்ற பெண்கள் 

வெட்டப்பட்ட கூந்தலை சந்தேக நபர்களான பெண்கள் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கள்ளத்தொடர்பால் பறிபோன பெண்ணின் கூந்தல்! | A Woman Who Lost Her Hair Due To Adultery

சம்பவம் குறித்து தாக்குதலுக்கு உள்ளான பெண் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய தாக்குதல் நடத்திய மூன்று பெண்களில் பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கள்ளத்தொடர்பால் பறிபோன பெண்ணின் கூந்தல்! | A Woman Who Lost Her Hair Due To Adultery

மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவன், தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் பெண் தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான பெண், சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.