பகமூன தர்கல்லேவ, பகுதியில் ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான மகேஷ் ரொஹான் என்ற குழந்தையின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்றைய தினம் (10-03-2023) ஹிகுரகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி பாதுகாப்பிற்காக பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பகமூன பொலிஸார் தெரிவித்தனர்.