தமிழ் பிரதேசத்தில் பலரது கவனத்தை ஈர்த்த பாடசாலை மாணவர்கள்!

0
218

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் மணமகள் மற்றும் மணமகன் அலங்கார போட்டி இடம்பெற்றது.

தமிழர்ப்பகுதியில் பலரின் கவனத்தை ஈர்த்த பாடசாலை மாணவர்கள்! | School Students Attracted Attentio People Tamil

இந்நிலையில் ஆண் மாணவர்கள் மட்டுமே கல்வி பயிலும் குறித்த கல்லூரியில் ஆண் மணமகன் மற்றும் பெண் மணமகள் அலங்காரம் மேற்கொண்டு சிறப்பாக அலங்கரிக்கப்படும் ஜோடி வெற்றி பெறும் விதமாக போட்டி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

அதன்படி நான்கு குழுக்களாக மாணவர்கள் பிரிந்து போட்டியில் கலந்து கொண்ட நிலையில் ஆண்களுக்கான திருமண உடை பெண்களுக்கான திருமண அலங்காரம் என சிறப்பாக போட்டியாளர்களை அலங்கரித்திருந்தனர்.

நேற்றைய விளையாட்டு நிகழ்வில் இந்த போட்டி பலரின் கவனத்தை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்ப்பகுதியில் பலரின் கவனத்தை ஈர்த்த பாடசாலை மாணவர்கள்! | School Students Attracted Attentio People Tamil