யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நிருபரின் கன்னத்தில் முத்தமிட்ட இளம்பெண்!

0
229

மால்டோவா தலைநகர் சிசினாவில் உள்ள தேவாலயத்தின் முன் நின்று ஜான்பால் கோன்சோ என்ற ஆஸ்திரேலிய நிருபர் உக்ரைனுக்கு ராணுவ உதவியாக 500 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்ததைப் பற்றிய செய்தி அறிக்கை குறித்து தகவலளிக்க ஒத்திகை பார்த்தார்.

அப்போது திடீரென அங்கு வந்த இளம்பெண் ஒருவர், யாரும் எதிர்பாரா வண்ணம் குறித்த ஆஸ்திரேலிய நிருபருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

யாரும் எதிர்பாரா வண்ணம் நிருபர் கன்னத்தில் முத்தமிட்ட இளம்பெண்! | Young Girl Kissed The Australian Reporter Ukraine

நிருபர் கோன்சோவோ வெக்கத்தில் நெளிந்து கொண்டே புன்னகைத்தார். அதிலும் அப்பெண் போகும்போது, “நீங்க ரொம்ப க்யூட்” என்று சொல்லிவிட கோன்சோ கூடுதல் குஷியாகிவிட்டார்.

இது தொடர்பான காணொளி காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.