விஜய், அஜித்துடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை சாய் பல்லவி! இதுதான் காரணமா?

0
225

தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் சாய் பல்லவி.

இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் படங்களில் கதாநாயகியாக நடிக்க மறுத்த தகவல் வெளியாகி தமிழ் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் என்கிற திரைப்படம் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தார்.

விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்த முன்னணி நடிகை! இதுதான் காரணமா? | Sai Pallavi Refused To Act With Vijay And Ajith

இந்த படத்தில் மலர் என்கிற டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவி தன் யதார்த்த நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

பிரேமம் படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தாலும் அதில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவிக்கு தான் அதிகளவில் பாராட்டுக்கள் கிடைத்தன. 

விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்த முன்னணி நடிகை! இதுதான் காரணமா? | Sai Pallavi Refused To Act With Vijay And Ajith

தமிழில் தியா என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமான சாய்பல்லவி. அடுத்தடுத்து தனுஷ் உடன் மாரி 2, சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்தார். குறித்த இரு படங்களும் பெரிய அளவில் ஓடவில்லை.

இதனால் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற சாய் பல்லவிக்கு அங்கு அடுத்தடுத்து ஹிட் படங்களாக அமைந்தன. இதனால் குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக சாய் பல்லவி உயர்ந்தார்.

இவ்வாறான நிலையில் நடிகை சாய் பல்லவி, விஜய், அஜித் படங்களில் கதாநாயகியாக நடிக்க மறுத்த தகவல் வெளியாகி தமிழ் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்த முன்னணி நடிகை! இதுதான் காரணமா? | Sai Pallavi Refused To Act With Vijay And Ajith

இந்நிலையில், விஜய் நடிப்பில் கடந்த மாதம் பொங்கலுக்கு வெளிவந்த வாரிசு படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் சாய் பல்லவியை தான் படக்குழுவினர் அணுகினார்களாம்.

ஆனால் அவரோ தனது கேரக்டருக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லாததால் நடிக்க மறுத்து விட்டாராம். 

மேலும், H.வினோத் – அஜித் கூட்டணியில் கடந்தாண்டு ரிலீசான வலிமை படத்திலும் சாய் பல்லவியை தான் கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டார்களாம்.

விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்த முன்னணி நடிகை! இதுதான் காரணமா? | Sai Pallavi Refused To Act With Vijay And Ajith

அதிலும் தனக்கு வெயிட்டான கதாபாத்திரம் இல்லாததால் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டாராம் சாய்பல்லவி. முன்னணி நடிகரின் படமாக இருந்தாலும் முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கும் சாய் பல்லவியின் முடிவு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.