உக்ரைனுக்கு செல்லும் இஸ்ரேலிய அமைச்சர்!

0
242

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் எலி கோஹென் இன்று உக்ரேனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த வருடம் ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பமாகிய பின்னர் உக்ரேனுக்கு இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் விஜயம் செய்கின்றமை இதுவே முதல் தடவையாகும்.

உக்ரேனிய ஜனாதிபதி ஸேலென்ஸ்கி வெளிவிவகார அமைச்சர் திமிதிர் குலேபா ஆகியோரை அமைச்சர் கொஹேன் சந்திப்பார் என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விஜயத்தின்போது இஸ்ரேலிய தூதரகத்தை அமைச்சர் கோஹென் முழுமையாக மீளத் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய, உக்ரேன் யுத்தத்தில் எச்சரிக்கையான அணுகுமுறையை இஸ்ரேல் பின்பற்றியதுடன், நடுநிலையை பின்பற்ற முயற்சித்து வருகிறது.

உக்ரேனுக்கு மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுப்பியுள்ளது. எனினும் ஆயுதங்களை அனுப்பவில்லை.

எனினும், உக்ரேனுக்கு இராணுவ உதவிகளை வழங்குவது குறித்து தான் சிந்திப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு இம்மாத முற்பகுதியில் கூறியிருந்தார்.