பிக்பாஸ் கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்ட ஜனனி!

0
234

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிக்கரமாக ஓடி முடிந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6.

பிக்பாஸ் சீசன் 3 யில் இலங்கைப் பெண் லாஸ்லியா கலந்து கொண்டு ரசிகர்களில் கவனத்தை ஈர்த்தார். இவ்வாறான நிலையில் நடந்து முடிந்த சீசன் 6யில் இலங்கையை சேர்ந்த ஜனனி பங்கேற்றார். இதன் மூலம் இவரும் அதிக ரசிகர்களின் அதரவை பெற்றுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார்.

இது ரசிகர்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்ததுடன் பிக்பாஸ் வீட்டில் இறுதி வரை இவர் பயணிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பிக்பாஸ் கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்ட இலங்கைப் பெண் ஜனனி! | Bigg Boss Celebration Sri Lankan Girl Janany Dance

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் ஜனனிக்கு படவாய்ப்புக்கள் வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றில் ஜனனி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

மேலும், இந்தியாவில் தங்கியிருக்கும் ஜனனி சமூகவலைதளங்களில் ஆர்வம் காட்டிவரும் நிலையில் அவ்வபோது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றார்.  

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்சில் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் ஜனனி பகிர்ந்துள்ளார்.