நயன்தாரா கேட்டும் முடியாது என்று கூறிய லைக்கா நிறுவனம்.. திடீரென குழப்பத்தை உண்டாக்கிய விக்கி

0
131

ஏகே 62

ஏகே 62 விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்த படம். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

நயன்தாரா கேட்டும் முடியாது என்று கூறிய லைக்கா நிறுவனம்.. திடீரென குழப்பத்தை உண்டாக்கிய விக்கி | Vignesh Sivan Liked Ak 62 Ott Post

இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்த நிலையில் திடீரென இப்படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிறிவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் யார்

விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்துக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கு முழு திருப்தியை தராத காரணத்தினாலும், 8 மாதங்கள் அவகாசம் கொடுத்தும் இப்படியொரு கதையை தயார் செய்துள்ளாரே என்றும் விக்னேஷ் சிவன் மீது கோபத்தில் லைக்கா நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாரா கேட்டும் முடியாது என்று கூறிய லைக்கா நிறுவனம்.. திடீரென குழப்பத்தை உண்டாக்கிய விக்கி | Vignesh Sivan Liked Ak 62 Ott Post

மறுத்த நிறுவனம்

இதனால், இப்படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதில் வேறொரு இயக்குனர் இயக்கப்போவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த செய்தியை கேள்விப்பட்ட நயன்தாரா, உடனடியாக லைக்கா நிறுவனத்திற்கு போன் கால் செய்து பேசியுள்ளார். ஆனாலும் லைக்கா நிறுவனம் தங்களுடைய முடிவை மாற்றிக்கொள்வதாக இல்லையாம்.

விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கப்போவதாக ஒரு பக்கம் செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் அனைவரையும் குழப்பும் விதமாக செயல் ஒன்றை செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

விக்கி உண்டாக்கிய குழப்பம்

ஏகே 62 படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தனர்.

நயன்தாரா கேட்டும் முடியாது என்று கூறிய லைக்கா நிறுவனம்.. திடீரென குழப்பத்தை உண்டாக்கிய விக்கி | Vignesh Sivan Liked Ak 62 Ott Post

இந்நிலையில், அந்த அறிவிப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லைக் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். இதனால் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போகிறாரா? இல்லை வேறொரு இயக்குனர் இப்படத்தை இயக்குவார்களா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

நயன்தாரா கேட்டும் முடியாது என்று கூறிய லைக்கா நிறுவனம்.. திடீரென குழப்பத்தை உண்டாக்கிய விக்கி | Vignesh Sivan Liked Ak 62 Ott Post