கடலை மாவு இருந்தா போதும்! இந்த ஸ்வீட் செய்து சாப்பிட்டு பாருங்க..

0
134

இனிப்பு, கார வகைகளில் முக்கிய இடம் பிடிப்பது கடலை மாவு, கடலை மாவில் காரசாரமான பதார்த்தங்கள் செய்து ருசித்திருப்போம்.

ஆனால் பர்ஃபி செய்து சாப்பிட்டதுண்டா? இந்த பதிவில் கடலை மாவை கொண்டு சுவையான பர்ஃபி செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

நெய்- ஒரு கப்
கடலை மாவு- 3 கப்
ரவை- 2 டீஸ்பூன்
சர்க்கரை- 1 1/2 கப்
Food Colour- சிறிதளவு
ஏலக்காய் தூள்- 1/4 டீஸ்பூன்

கடலை மாவு இருந்தா போதும்! இந்த மாதிரி ஸ்வீட் செய்து சாப்பிடுங்க | Besan Burfi In Tamil

செய்முறை

முதலில் கடாயை அடுப்பில் வைத்து ஒரு கப் நெய் சேர்த்து சூடேற்றவும், இதில் கடலை மாவை போட்டு நன்றாக வறுக்கவும்.

நெய்யை முழுவதுமாக கடலை மாவு உறிஞ்சும் வரை வறுத்து எடுக்கவும், இதனுடன் ரவையை சேர்த்து நன்றாக கிளறவும்.

மிதமான சூட்டில் கிளறும் போது, கடலை மாவு உறிஞ்சிய நெய் சிறிது சிறிதாக கடாயில் வெளியேறத் தொடங்கும்.

golden brown நிறத்திற்கு மாறிய பின்னர் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீரில், ஒன்றரை கப் சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சவும், இதனுடன் Food Colour-ம், ஏலக்காய் தூளும் சேர்த்துக் கொள்ளவும்.

இதனுடன் கடலை மாவை சேர்த்து கலக்கவும், கடைசியாக பேக்கிங் பேப்பரில் போட்டு வைக்கவும், அப்படியே 30 நிமிடங்கள் விட்டு விட்டு உங்களுக்கு பிடித்தமான டிசைன்களில் வெட்டி எடுத்துக்கொண்டால் சுவையான பர்ஃபி தயாராகி விடும்!!!