இந்தியா இல்லாவிட்டால் இலங்கை மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும்!

0
226

இலங்கையில் நெருக்கடி நிலையில் இந்தியா துரிதமாக செயற்பட்டிருக்காவிட்டால் இலங்கை மோசமான சமூக விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கான இந்தியாவின் உதவி மற்றும் சர்வதேச நாணயநிதியத்திற்கு இந்தியா வழங்கியுள்ள நிதி உத்தரவாதங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,

இந்தியா இல்லையென்றால் இலங்கை மோசமான விளைவுகளை சந்தித்திருக்கும்! | Lanka Would Have Suffered Worse If Not For India

இந்தியாவின் உதவிகள் ஆதரவுகள் இரு நாடுகளிற்கும் இடையிலான நம்பிக்கையில் காணப்படும் இடைவெளியை மேலும் குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா போன்று இலங்கைக்கு  யாரும் உதவியிருக்க முடியாது

இந்தியா இல்லையென்றால் இலங்கை மோசமான விளைவுகளை சந்தித்திருக்கும்! | Lanka Would Have Suffered Worse If Not For India

வேறு எந்த நாட்டினாலும் இந்தியா போன்று இலங்கைக்கு உதவியிருக்க முடியாது எனவும் அவர்  தெரிவித்தார்.

மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 22 மாதங்களில் மூன்று முறை இலங்கை வந்துள்ளார்.

அவரது சமீபத்தைய விஜயம் இரு நாடுகளினதும் இருதரப்பு உறவுகள் புதிய கட்டத்தில் நுழைவதை குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் மிலிந்த மொராகொட கூறியுள்ளார்.

அவரது விஜயம் இலங்கையின் பொருளாதார மீட்சியின் ஆரம்பத்தை குறித்து நிற்கின்றதாகவும் மிலிந்தமொராகொட மேலும் தெரிவித்துள்ளார்.