இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழந்த 11 ஆம் வகுப்பு மாணவி!

0
82

இந்தியாவில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம், இந்தூரின் உஷா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விரிந்தா திரிபாதி(16), தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் பள்ளிக்கு வழக்கம் போல சென்றார்.

அங்கு குடியரசு தின விழா ஒத்திகை நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற விரிந்தா, ஒத்திகை முடிந்து வகுப்பு சென்றார்.

இந்நிலையில், சுமார் 12 மணி அளவில் மாணவி திடீரென மயங்கி சரிந்து விழுந்தால் பதறிப்போன ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாரடைப்பால் உயிரிழந்த 11 ஆம் வகுப்பு மாணவி; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Class 11 Student Died Of Heart Attack

கண் தானம்

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், மாரடைப்பு ஏற்பட்டதே மாணவியின் மரணத்திற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினத்தன்று இந்தூரில் குளிர் அதிகமாக இருந்த நிலையில் மாணவி மெலிதான விளையாட்டு பயிற்சிக்கான உடைகளை அணிந்து கொண்டு குடியரசு தின விழா ஒத்திகை செய்ததுடன் அந்த நேரத்தில் அவர் சில நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டுள்ளார்.

மாரடைப்பால் உயிரிழந்த 11 ஆம் வகுப்பு மாணவி; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Class 11 Student Died Of Heart Attack

இந்நிலையில் மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட இவை காரணிகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில்,இந்துரைச் சேர்ந்த சமூக தொண்டு நிறுவனம் ஒன்று மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு கண் தானத்திற்காக கோரிக்கை வைத்த நிலையில் மாணவியின் குடும்பத்தினர் அவரது கண்களை தானம் செய்துள்ளமை கண்கலங்க வைத்துள்ளது.