மெதுவாக சாப்பிட்டதால் ரூ.10 ஆயிரம் அபராதமாம்..!

0
88

அதிக நேரம் அமர்ந்து சாப்பிட்டதால், சுமார் 10 ஆயிரம் ரூபாய் பார்க்கிங்கில் அபராதம் விதித்தக்கப்பட்டது.

மெக்டோனால்ஸ்

இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் நகரத்தில் உள்ள நியூமார்க்கெட் சாலையில் மெக்டோனால்ஸ் ஃபாஸ்ட் புட் உணவகம் ஒன்று உள்ளது. அங்கு ஷபூர் மெஃப்தா என்பவர் தனது சகோதரரை சந்தித்து உணவருந்தியுள்ளார். சாப்பிட்டு முடித்து பணம் கொடுக்க வந்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

என்னவென்றால், மெக்டோனால்ஸ் வாடிக்கையாளர்கள் கார் பார்க்கிங் செய்ய 90 நிமிடங்கள் தான் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை மீறி அவர் காரை பார்க்கிங்கில் நிறுத்தியதால், 100 ஐரோப்பிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம்

இதுகுறித்து அவர் கூறுகையில், “நாங்கள் உணவருந்தி வந்த மெக்டோனால்ஸின் எந்த இடத்திலும் 90 நிமிடங்கள் வரை மட்டுமே சாப்பிட அனுமதி என எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. உணவை அவசரமாக சாப்பிட நாங்கள் விரும்பவில்லை.

மேலும், சற்று அதிகமாக உணவை நாங்கள் ஆர்டர் செய்திருந்தோம்” என்றார். வருடம் முதல் 2 நாட்கள் அவர் அந்த ஹோட்டலுக்கு சென்றிருந்த நிலையில், பார்க்கிங் நிறுவனம் அவருக்கு சுமார் 10,000 ரூபாய்க்கான இரண்டு அபராத அறிவிப்புகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.