இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற கோட்டாபய!

0
96

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள் நேற்றைதினம் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட கோட்டாபய! | Gotabaya Who Participated Republic Day Of India

இந்த விழாவில் இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவும் இந்த விழாவில் கலந்துகொண்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் 74ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திலும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.