காதலுக்காக ஆணாக மாறிய இளம் பெண்! பின்னர் காத்திருந்த அதிர்ச்சி…

0
111

காதலித்த தோழிக்காக பெண்ணொருவர் ஆணாக மாறிய சம்பவம் இணையவாசிகளை வியப்படைய வைத்துள்ளது.

வீடு வாடகைக் கொடுத்த சோனல்

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோனல் என்பவர் தன்னுடைய வீட்டிலுள்ள குடும்ப பிரச்சினைக் காரணமாக தாம் இருக்கும் வீட்டில் மேல் மாடியை வாடகை விடுவதற்கு முடிவு செய்து அக்கபக்கத்திலுள்ளவர்களிடம் கூறி வைத்துள்ளார்.

அப்போது அரச ஊழியராக பணியாற்றிய சனா என்ற பெண் அந்த வீட்டிற்கு வாடகைக்கு வந்துள்ளார். இவர் குஜராத் மாநிலத்திலிருந்து தன்னுடைய வேலைக்காக வந்து தங்கியிருந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2016 ஆம் இடம்பெற்றுள்ளது.

இதனைதொடர்ந்து சனாவும் சோனலும் நெருங்கிய தோழிகளாக சுற்றித்திரிந்துள்ளார்கள். இதன் பின்னர் இவர்களின் நட்பு காதலாக மாற்றமடைந்து ஆரம்பித்துள்ளது.

இந்த விடயம் சோனலின் வீட்டாருக்கு தெரியவந்து சனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்கள்.

ஏமாற்றிய சனா ஆணுடன் தப்பியோட்டம்

இந்நிலையில் சனாவின் வேலை அரசாங்க வேலை என்பதால், அவருக்கென ஒரு வீட்டை வாங்கியுள்ளார். இவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக மாறியிருந்தது. தொடர்ந்து இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து சோனலும் அடிக்கடி இருவரும் ஓரே வீட்டில் தங்கி வந்தார்கள்.

காதலுக்காக ஆணாக மாறிய இளம் பெண்! அடுத்த நாள் காத்திருந்த அதிர்ச்சி: ஷாக்கான நெட்டிசன்கள்.. | Up Woman Change As Male

இதனால் சமூகத்தில் ஏதாவது பிரச்சினை வரும் என்று பயந்து சோனல் கடந்த 2020 ஆம் ஆண்டு அறுவைசிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ளார்.

இவர் மாறிய நிலையில் சனா இவரை ஏமாற்றி விட்டு வேறோரு ஆணுடன் சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சோனல் தனக்கு நியாயமான தீர்ப்பு வேண்டும் என்று பொலிஸாரிடம் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் சோனலின் மூலம் இந்த விடயம் வெளியுலகிற்கும் தெரியவந்துள்ளது. இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் இவர்களின் காதலை பார்த்து நெட்டிசன்கள் சோனலுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.