மீண்டும் வேலையை காட்டும் பாதாள உலகக்குழுத் தலைவர் கஞ்சிபானி!

0
42

நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் ஓமானில் இருந்து டுபாய் திரும்பி புஸ்ஸா சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் மீண்டும் தனது வழமையான வேலையை கஞ்சிபானி இம்ரான் ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற கஞ்சிபானி இம்ரான் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தப்பிசெல்வதற்காக கஞ்சிபானி இம்ரான் வெளிநாட்டு உளவாளிகளின் உதவியையும் பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது