மூன்று நாட்களில் 64 முட்டை வழக்குகள்!

0
56

கடந்த 3 நாட்களாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 64 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி , முட்டையை அதிக விலைக்கு விற்றதாக 36 வழக்குகள், விலையை காட்சி படுத்தாத குற்றச்சாட்டில் 26 வழக்குகள் அடங்குவதாக தெரிவித்தனர்.

அவர்கள் வசம் முட்டை இல்லை என விவகார அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கடந்த 22ஆம் திகதி மீண்டும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் முட்டைச் சோதனையை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த அதிகாரி, மேலும் பல சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.