டாக்டர் பிரியந்தினி பற்றி வெளியான சர்ச்சை தகவல்!

0
55

கடந்த சில மாதங்களிற்கு முன்னர் கிளிநொச்சி கண்டாவளை மருத்துவர் பிரியந்தினி பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்தார். அதன் பின்னர் அவர் கண்டாவளை பிரதேசத்தில் இருந்து இடமாற்றப்பட்டார்.

மாணவர்களை குறிவைத்த மருத்துவ மாபியாக்களை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டியதால் மருத்துவர் பிரியந்தினி  பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தார்.

மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் வெளியான சர்சைக்குரிய தகவல்! | Controversial Information Dr Priyanthini

முகநூலில் புகுந்த விசமிகள்

இந்நிலையில் தற்போது மருத்துவர் பிரியந்தினியின் உத்தியோகபூர்வ முகநூலில் யாரோ விசமிகள் சில பதிவுகளை இட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

அது தொடர்பில் தனது முகநூலில் மருத்துவர் பிரியந்தினி,

நான் பாட்டி வைத்தியம் பார்ப்பதில்லை. இங்கு முற்றிலும் தவறான மருத்துவம் என்ற பெயரில் எனது அடையாளத்தோடு தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. மனநலம் குன்றியவர்கள் பேஸ்புக்கில் அதிகரித்து அதிகரித்து வருகிறனர் விழித்திருங்கள் என பதிவிட்டுள்ளார்.