விடுதலைப் புலிகளின் தலைவரை சந்திக்கவிருந்த மகிந்த! வெளியாகிய தகவல்

0
50

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் செய்ய மகிந்த ராஜபக்ச நினைக்கவில்லை, சமாதானப் பேச்சு நடத்தவே இருந்தார் என புதிய ஹெல உறுமயவியன் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மகிந்த விடுதலைப் புலிகளுடன் போர் செய்ய நினைக்கவில்லை. சமாதானப் பேச்சு நடத்தவே இருந்தார்.

“நான் வன்னிக் காட்டுக்குச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடன் நேருக்கு நேர் பேச்சு நடத்துவேன்” என மகிந்த சிந்தனையில் அவர் குறிப்பிட்டிருந்தார் என கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.