கறுப்புப் பட்டி போராட்டத்தில் ஹிருணிகா பிரேமசந்திர!

0
138

காலிமுகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் சுதந்திர நிகழ்வுகளுக்கான மேடையில் கறுப்புப் பட்டிகளை அணிந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்.

பின்னர் அந்த இடத்துக்கு வந்த பொலிஸார், தேசிய நிகழ்வுகள் நடைபெறும் இடத்தில் இவ்வாறு செயற்பட முடியாதெனக் கூறி அங்கிருந்து ஹிருணிகாவை அப்புறப்படுத்த முயற்சித்தனர்.

இதனால், பொலிஸாருடன் ஹிருணிகா கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.