ரணிலின் யாழ் விஜயத்தால் அமைச்சர் டக்ளஸுக்கு நேர்ந்த நிலை!

0
52

தேசிய பொங்கலைக் கொண்டாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை (15-01-2023) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

ரணிலின் யாழ் விஜயத்தில் அமைச்சர் டக்ளஸுக்கு நேர்ந்த நிலை! | Minister Douglas During Ranil S Visit To Jaffna

இந்த நிலையில் தேசிய பொங்கல் நிகழ்வு மற்றும் ஏனைய கலந்துரையாடல்களை நிறைவு செய்து இறுதியாக பலாலி வீதியிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரனின் (Vijayakala Maheswaran) இல்லத்திற்கும் விஜயம் மேற்கொண்டு கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

ரணிலின் யாழ் விஜயத்தில் அமைச்சர் டக்ளஸுக்கு நேர்ந்த நிலை! | Minister Douglas During Ranil S Visit To Jaffna

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி விஜயகலா மகேஸ்வரனின் வீட்டிற்கு செல்லும் வேளை ஜனாதிபதியின் வாகனத்தில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் (Douglas Devananda) ஒன்றாக பயணித்திருந்தார்.

விஐயகலா மகேஸ்வரனின் வீட்டு வாயில் வரை ரணில் விக்கிரமசிங்கவின் வாகனத்தில் வந்த டக்ளஸ் தேவானந்தா வீட்டுக்குள் நுழைய முடியாது தத்தளித்ததோடு ஜனாதிபதி விஜயகலா மகேஸ்வரனின் வீட்டுக்குள் நுழைந்த பின்னர் வாகனத்தை விட்டு இறங்கி விஜயகலா மகேஸ்வரனின் வீட்டுக்கு முன்னாடி சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக தனியாக வீதியின் கரையில் நின்டு தனது வாகனத்திற்காக காத்திருந்தார்.

ரணிலின் யாழ் விஜயத்தில் அமைச்சர் டக்ளஸுக்கு நேர்ந்த நிலை! | Minister Douglas During Ranil S Visit To Jaffna

இருப்பினும் அந்த விடத்தில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீங்கள் உள்ளே அவரை உள்ளே உட்காருமாறு அழைத்தபோதும் அவர் உள்ளே செல்லவில்லை என அறியமுடிகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பயணித்த டக்ளஸ் தேவானந்தா தன்னந்தனியாக நடுவீதியில் இறக்கி விடப்பட்டமையை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.