பிள்ளையின் கண்முன்னே தாய் கழுத்தை அறுத்து கொலை!

0
120

பிள்ளையின் கண் முன் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இச்சம்பவம் பொல்பித்திகம தல்பத்வெவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம்

தன் பிள்ளையை பாடசாலையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்லும் போதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிள்ளையின் கண் முன் தாய் கழுத்தறுத்து கொலை | Mother Strangled To Death In Front Of Child

இது தொடர்பில் அவருடைய கணவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பிள்ளையுடன் மனைவி வரும் வழியை மறித்த சந்தேக நபர் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிகின்றனர்.