உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் புதிய சாதனை படைத்த ரொனால்டோ!

0
254

கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் சுற்றில் கானா அணியை மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி வெற்றிபெற்றது.

இந்நிலையில் ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு வாய்ப்புகளை தவறவிட்ட போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), ஆட்டத்தின் 65 வது நிமிடங்களில், பெனால்டி ஸ்பாட் மூலம் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் புதிய சாதனை படைத்த ரொனால்டோ! | Ronaldo Set A New Record World Cup Football Match

இதன் மூலம் ஐந்து வெவ்வேறு உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்று ரொனால்டோ (Cristiano Ronaldo) புதிய சாதனை படைத்துள்ளார்.