எங்க அண்ணனுக்கு ஓட்டுப் போட்டு காப்பாத்துங்க ப்ளீஸ்..அண்ணனை காப்பாற்ற களமிறங்கிய ஐஸ்வர்யா!!

0
103

தமிழில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

பிக்பாஸ் சீசன் 6யில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் தான் மணிகண்டா. இவர் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில், அண்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் நைஸாக தப்பித்து வரும் மணிகண்டன் இந்த வாரம் நாமினேஷனில் மாட்டிக் கொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் மணிகண்டன் பெரிதாக கேம் ஆடவில்லை என்றும் கத்துவதை தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது என்றும் ரசிகர்கல் ட்ரோல் செய்து வந்தாலும், அவருக்கு ஆதரவான ரசிகர்களும் உள்ளனர்.  

இவருடன் அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், ராம் ஆகியோரம் நாமினேஷனில் இடம் பிடித்துள்ளனர்.

பிக்பாஸ் போட்டியாளர் ஒருவருக்காக ரசிகர்களிடம் கெஞ்சிய பிரபல நடிகை! | Bigg Boss 6 Manikandan Save Vote Aishwarya Rajesh

இதில், ராபர்ட் மாஸ்டர், ராம் மற்றும் மணிகண்டன் டேஞ்சர் ஜோனில் உள்ள நிலையில் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அண்ணனை எப்படியாவது இந்த வாரம் காப்பாற்ற வேண்டும் என டுவிட் போட்டுள்ளார்.  

அதில் எங்க அண்ணனுக்கு ஓட்டுப் போட்டு இந்த வாரம் அவரை காப்பாத்துங்க ப்ளீஸ் என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளர் ஒருவருக்காக ரசிகர்களிடம் கெஞ்சிய பிரபல நடிகை! | Bigg Boss 6 Manikandan Save Vote Aishwarya Rajesh

இதனால் கடுப்பான ரசிகர்கள் முன்னணி நடிகையே இப்படி ஓட்டு கேட்டால் அது இன்ஃப்ளூயன்ஸ் ஆகாதா? என்றும் மணிகண்டன் அவரது ஆட்டத் திறமையால் ஜெயிக்கட்டும், நீங்க ஓட்டுக் கேட்டா ரசிகர்கள் உடனடியாக போட்டு விடுவார்கள் என ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கமெண்ட்டுகள் குவிகின்றன.