காணாமல் போன 15 வயது சிறுமி; பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸ்!

0
144

கண்டியில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 11.00 மணிக்கு பின்னர் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

பெற்றோருக்கு ஒரே பிள்ளையான குறித்த 15 வயது சிறுமி வீட்டிலிருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார் . மாயமான சிறுமி கண்டி புஸ்ஸலாவவை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 

சம்பவம் தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.