திடீர் மயக்கமடைந்த 40 மாணவிகள்; மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதி!

0
157

மாத்தளை சுஜாதா மகளிர் பாடசாலை மாணவிகள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம் பெற்றுள்ளது.

இதில் சுமார் 40 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவிகள் மயக்கம்

குறித்த மாணவிகளுக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாணவிகள் வென்னப்புவ பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றிப்பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இன்று காலை பாடசாலையில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இதில் கலந்துகொண்ட போதே, மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மாணவிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாணவிகளின் நிலை சாதாரணமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.