கொழும்பில் ஹிருணிக்கா குழு ஒன்றுகூடிய பகுதியில் அமைதியின்மை! பெண் கைது (Video)

0
84

கொழும்பு – மாகமசேகர மாவத்தை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் வீதி நாடகம் செய்ய வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்திய நிலையில் அதனை மீறி ஹிருணிக்கா உள்ளிட்ட குழுவினர் வீதி நாடகத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் அறிவுறுத்தலை மீறி நடந்து கொண்டதாக தெரிவித்து பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

முதலாம் இணைப்பு

நாட்டில் தற்போதுள்ள பிரதான பிரச்சினைகள் அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் வீதி நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

குறித்த நடவடிக்கை இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் அணியின் மகளிர் அணியினர் முன்னெடுத்துள்ளனர்.

video source from Lankasri

இதில் பெண்கள் அதிகளவானோர் செம்மஞ்சள் நிற உடை மற்றும் செம்மஞ்சள் நிற பட்டி தலையில் அணிந்து, செம்மஞ்சள் நிற கொடிகளை ஏந்திய வண்ணம் கலந்து கொண்டுள்ளதுடன், ஹிருணிக்கா பிரேமசந்திரவும் கலந்து கொண்டுள்ளார். 

இதேவேளை அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery