இலங்கையில் கூலிக்குப் பதிலாக ஹெராயின் வழங்கிய முதலாளி!

0
125

ஊழியர்களுக்கு சம்பளத்திற்கு பதிலாக ஹெரோயின் பொதிகளை வழங்கிய வர்த்தகர் ஒருவரை நவகமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வர்த்தகர் நவகமுவ பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என பொலிஸார் கூறுகின்றனர்.

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை - ஜனாதிபதி நடவடிக்கை  - BBC News தமிழ்

உணவுக்கு பதில் போதைப்பொருள்

குறித்த வர்த்தகரிடம் ஆறு பேர் தோட்ட வேலை செய்துள்ள நிலையில், தொழிலாளர்கள் போதைக்கு அடிமையானதால் அவர்களுக்கு காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் ஒரு பக்கட் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தகரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, ​​பணம் கொடுத்தால் மறுநாள் வேலைக்கு வரமாட்டார்கள் என்பதால் ஹெராயின் பக்கட்டுக்களை கொடுத்ததாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.