யாழில் வாளுடன் வீட்டை முற்றுகையிட்ட கல்லூரி மாணவன்!

0
161

யாழ்ப்பாணத்தில் உள்ள முள்ளியான் பகுதியில் நபரொருவர் வாளால் வீட்டை சேதப்படுத்தி அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழில் வாளுடன் வீட்டை முற்றுக்கையிட்ட கல்லூரி மாணவன்: அச்சமடைந்த வயோதிப தாய்! | College Student House Sword Jaffna Mother Fear

குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றினை முற்றுகையிட்டு அடாவடி செய்த நபர் வீட்டின் கதவுகளை வாள்களால் தாக்கியும் கற்களால் எறிந்தும் சேதப்படுத்தியுள்ளார்.

குறித்த வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப தாய் ஒருவர் மிகுந்த அச்சம் கொண்டு அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

யாழில் வாளுடன் வீட்டை முற்றுக்கையிட்ட கல்லூரி மாணவன்: அச்சமடைந்த வயோதிப தாய்! | College Student House Sword Jaffna Mother Fear

நேற்றைய தினம் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கல்வியற்கல்லூரி மாணவர் ஒருவரே வாளுடன் வந்து அச்சுறுத்தியதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.