இரண்டாவது பிணை மனு தாக்கல் செய்த தனுஷ்க குணதிலக..

0
222

அவுஸ்தியேலியாவில் பெண் ஒருவர் விவகாரத்தில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தனது இரண்டாவது பிணை மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தனுஷ்க குணதிலக்க, பெண்ணின் கழுத்தை நெரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த 06 ஆம் திகதி அவர் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

பெண் விவகராம்; தனுஷ்க குணதிலகவின் அடுத்த முயற்சி; வெற்றியளிக்குமா? | Dhanushka Gunathilaka Rape Case Sydney

தப்பிச் செல்லும் வாய்ப்பு

அவர் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக பொலிஸார் வாதிட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு பிணை மறுக்கப்பட்டது.

இதனையடுத்து, அவர் தனது இரண்டாவது பிணை மனுவினை இன்று தாக்கல் செய்துள்ளாதாக கூறப்படுகின்றது.

பெண் விவகராம்; தனுஷ்க குணதிலகவின் அடுத்த முயற்சி; வெற்றியளிக்குமா? | Dhanushka Gunathilaka Rape Case Sydney

இந் நிலையில், பிணை மனு மீதான விசாரணை டிசம்பர் 8 ஆம் திகதி சிட்னி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.