கண்டி, நுவரெலியா வீதியில் விபத்து; ஐவர் வைத்தியசாலையில்!

0
406

கண்டி, நுவரெலியாவின் பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

இச் சம்பவம் இன்று (05) காலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் காரணம்

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த சாரதி உட்பட 5 பேர் படு காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மஹரகம பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

https://www.taatastransport.com/