இலங்கையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த நபர்!

0
383

வாகன விபத்து ஒன்றில் மூளை சாவடைந்த நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் குடும்பத்தினரின் இந்த முடிவை பலரும் பாராட்டியுள்ளனர்.

இலங்கையில் விபத்தில் மூளை சாவடைந்த நபர்... குடும்பத்தினருக்கு குவியும் பாராட்டுக்கள்! | Person Brain Dead In Accident Organ Donation

ஹசலக மகாஹஸ்வெத்தும கிராமத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 48 வயதான எம்.ஜீ. சந்திம என்பவர் இவ்வாறு விபத்தில் மூளை சாவடைந்துள்ளார்.

ஹசலக பிரதேச சபையில் சாரதியாக தொழில் புரிந்து வந்த இந்த நபர், பணி முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இலங்கையில் விபத்தில் மூளை சாவடைந்த நபர்... குடும்பத்தினருக்கு குவியும் பாராட்டுக்கள்! | Person Brain Dead In Accident Organ Donation

பதுளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளை சாவடைந்த நபரின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் அனுமதியுடன் இன்று (31-10-2022) பதுளை பொது வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) இணங்க இலங்கை விமானப்படை (SLAF) இந்த நடவடிக்கையை எளிதாக்கியது. 

இலங்கையில் விபத்தில் மூளை சாவடைந்த நபர்... குடும்பத்தினருக்கு குவியும் பாராட்டுக்கள்! | Person Brain Dead In Accident Organ Donation

விமானப்படையின் கூற்றுப்படி, நன்கொடையாளரின் முக்கிய உறுப்புகள் தேசிய மருத்துவமனையால் தேவைப்படும் நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேவேளை, இரத்மலானையை தளமாகக் கொண்ட இல.04 படைப்பிரிவில் இருந்து பெல் 412 உலங்குவானூர்தியானது, தேசிய வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க, வான்வழி அம்புலன்ஸாக மாற்றப்பட்டது.