யாழ்.மாவிட்டபுரத்தில் தீயில் கருகிய வாகனம் !

0
467

யாழ்ப்பாணம் –  மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளது.

யாழ். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த வாகனம் திடீரென தீப்பற்றியது என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.வீதியில் இரவுவேளை இடம்பெற்ற பகீர் சம்பவம்! (புகைப்படங்கள்) | Jaffna Kankesanturai Vehicle Fire Accident Today

இந்தத் தீ விபத்து இன்றைய தினம் இரவு (21-10-2022) குறித்த வாகனத்தில் சாரதி மட்டும் பயணித்த போது இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற போதும் சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் கூறினர்.

யாழ்.வீதியில் இரவுவேளை இடம்பெற்ற பகீர் சம்பவம்! (புகைப்படங்கள்) | Jaffna Kankesanturai Vehicle Fire Accident Today

சம்பவத்தையடுத்து காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து தீயணைப்பு வாகனம் கொண்டுவரப்பட்டு தீயணைத்த போதும் வான் முற்றாகச் சேதமடைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்.வீதியில் இரவுவேளை இடம்பெற்ற பகீர் சம்பவம்! (புகைப்படங்கள்) | Jaffna Kankesanturai Vehicle Fire Accident Today