என்னை வெளியே அனுப்பி விட வேண்டாம்; பிக்பாஸிடம் மன்றாடிய தனலட்சுமி.!

0
778

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் தனலட்சுமி – அசல் கோலார் இடையே எதார்த்தமாக தொடங்கிய பேச்சு, வாக்குவாதமானது. அதில் தன்னை பாடி ஷேமிங் செய்வதாக அசல் கோலாரின் மீது குற்றம்சாட்டினார் தனலட்சுமி. இதனிடையே தனலட்சுமியிடம் விசாரிக்க சென்ற விக்ரமன், அசீமால் தடுக்கப்பட்டதை அடுத்து கோபப்பட்டு பேசினார். மேற்கொண்டு அவரிடம் பலரும் பேச அங்கு வாக்குவாதம் உருவானது. இதனிடையே தனலட்சுமி, பிக்பாஸ் கேமரா முன்பாக, “நான் இங்கே வந்திருக்கவே கூடாது.. நான் போக வேண்டும், என்னை வெளியே அனுப்பிவிடுங்கள்” என்பது போல் பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் அவரை சிலர் சமாதானப்படுத்தினார்கள். இதனை தொடர்ந்து கொஞ்சம் ரிலாக்ஸான பிறகு தனலட்சுமி கேமரா முன் வந்து நின்று, “நான் அழுகிறேன்.. கஷ்டப்படுகிறேன் என்று சொன்னதால் என்னை வெளியே அனுப்பி விட வேண்டாம்.. நான் தான் கேட்டேன்.. தப்பு தான்.. மன்னித்து விடுங்கள்.. இந்த இடத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன்..  எனவே நான் சொன்னேன் என்பதற்காக நீங்கள் என்னை வெளியே அனுப்பி விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் .. ஒருவேளை நீங்களாகவே வெளியே அனுப்பினால் அனுப்புங்கள்.. நான் ஓவராக ஏதாவது பண்ணினால் வெளியே அனுப்புங்கள்.. ஆனால் நான் இப்படி என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என்று புலம்புவதற்காக வெளியே அனுப்பி விட வேண்டாம். இந்த இடத்துக்கு கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன்” என்று மீண்டும் கேட்டுக் கொண்டார்.