இந்திய இராணுவத்தின் 35வது படுகொலை நினைவேந்தல் யாழ்.போதனாவில் அனுஷ்டிக்கப்பட்டது…

0
507

யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35வது நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

1987 ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

35ம் ஆண்டு நினைவு தினம்

இந்திய இராணுவத்தின் மிலேச்சைத்தனமான படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல் இன்று(Photos) | Brutal Massacres Indian Army Jaffna Hospital

அந்த கொடூர சம்பவத்தின் 35ம் ஆண்டு நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இந்திய இராணுவத்தின் மிலேச்சைத்தனமான படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல் இன்று(Photos) | Brutal Massacres Indian Army Jaffna Hospital

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய இராணுவத்தின் மிலேச்சைத்தனமான படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல் இன்று(Photos) | Brutal Massacres Indian Army Jaffna Hospital

இதன்போது படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய இராணுவத்தின் மிலேச்சைத்தனமான படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல் இன்று(Photos) | Brutal Massacres Indian Army Jaffna Hospital

குறித்த நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்,பிரதிப் பணிப்பாளர்கள், நிர்வாக உத்தியோகஸ்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், உயிர்நீத்தவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்