13 இன்ஸ்டாகிராம் இடுகைகளில் இருந்து 4.43 மில்லியன் சம்பாதித்த கனடிய பிரபலம்

0
898

கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்த பிரபல பாப் கலைஞரான ஜஸ்டின் பீபர் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் $4.43 மில்லியன் சம்பாதித்துள்ளார்.

உலகின் முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் ஊடாக பலரும் பணம் சம்பாதிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் கடந்த 2021ம் ஆண்டில் இன்ஸ்டாவில் அதிகூடிய வருமானத்தை ஈட்டிய நபராக பய்பர் கருதப்படுகின்றார்.

பய்பர் கடந்த 2021ம் ஆண்டில் வெறும் 13 இன்ஸ்டாகிராம் பதிவுகளின் ஊடாக சுமார் 4.43 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியள்ளார்.

13 இன்ஸ்டா பதிவுகளில் 4.43 மில்லியன் டொலர் சம்பாதித்த கனேடிய பிரபலம் | Who Is The Highest Earning Instagram

அடுத்தபடியாக வனவிலங்கு புகைப்படக் கலைஞர் போல் நிக்கலன் (Paul Nicklen) 2.3 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளார்.

நெட்கிரடிட் (NetCredit) எனப்படும் நிறுவனத்தினால் இந்த புள்ளிவிபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

Paul Nicklen

இதேவேளை, உலக அளவில் இன்ஸடா பதிவுகள் மூலம் கடந்த ஆண்டு வருமானம் ஈட்டியவர்களின் வரிசையில் கால்பந்தாட்ட வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டா 85.2 மில்லியன் டொலர்களையும், லியனோல் மெஸ்ஸி 71.96 மில்லியன் டொலர்களையும் வருமானமாக ஈட்டியுள்ளனர்.

Cristiano Ronaldo
Lionel Messi

இந்திய கிரிக்கட் நட்சத்திரம் விராட் கொஹ்லி 36.66 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

Virat Kohli